Skip to content

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ. 13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் நேற்று கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. வரியில்லாத பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைகளில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி சேர்த்தல் ஆகியவை இணையதளம் மூலம் மக்கள் சரிசெய்ய வழிவகை செய்யப்படும். புதுச்சேரியில் மதிய உணவு திட்டத்தில் இனி அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படும்.

புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள இசிஆர் பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். இசிஎஸ் பேருந்து நிலையத்துக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மத்திய சிறையில் ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஏழை சிறை கைதிகள் நலத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி செய்யப்படும் .புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். “புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!