கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு உணவகத்திற்கு சென்று விட்டனர். அப்பொழுது பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் முதல் தளத்தில் இருந்து குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து கீழே வந்து உள்ளனர். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் அவர்களைப் பார்த்து நீங்கள் யார் ? என்று கேட்டு உள்ளார். உடனடியாக அங்கு இருந்து இருவரும் தப்பிச் சென்றனர். வீட்டின் முதல் தளத்திற்கு சென்ற செல்வராஜ் பார்த்த போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தார். அங்க வந்த குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 60 பவுன் தங்க நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…
- by Authour
