திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதற்கு பணம் கேட்டதற்காக அந்த 4 பேரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அகிலேஷை கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து புகாரின்பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து தாக்கியவர்களை தேடி வருகிறார்கள்.
பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்
- by Authour
