Skip to content
Home » ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் மனோஜ்(38), வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் பணம் கலெக்சன் செய்யும் பணியை செய்து வருகிறார். நேற்று இரவு தனது உறவினரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஒரு ஒட்லி ரூ.20 என 8 இட்லியை ரூ.160 கொடுத்து வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று ஓட்டலில் இருந்து வாங்கி சென்ற இட்லியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு இட்லியில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஓட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்த நிலையில் இன்று கரப்பான் பூச்சி இருந்த இட்லியை மனோஜ் நேரடியாக ஓட்டலுக்கு எடுத்து வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கவன குறைவாக ஆபத்தான முறையில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் இருக்கும் நிலையில் உணவகத்தில் உணவு பரிமாறப்படுவதாகவும் பசிக்கு சாப்பிட வாங்கி சென்ற இட்லியில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *