இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சேலம், திருத்தணி, திருப்பத்தூரில் 103 டிகிரி, மதுரை, திருச்சியில் 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, தருமபுரியில் 101 டிகிரி, தஞ்சாவூர், கோவையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு கூடுதலாக இருக்கக்கூடும்.