திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்த கண்டு அதிர்ச்சியானார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி பாத்திரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மணிமொழி திருவரம்பூர் போலீஸ் ஸ்டேனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் அவருடைய வீட்டில் புகுந்து நகையை திருடிய மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
