திருச்சிமாவட்டம், துறையூர் ஊராட்ச்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பொண்னுசங்கம்பட்டி பகுதியில் வசிப்பவர் பிருந்தா நேற்று மதியம் இவர் வீட்டு மீது நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் புளியமரம் இவரது ஓட்டு வீட்டின் மேல் விழுந்து ஓடுகள் உடைந்தன.
மேலும் இது சம்பந்தமாக பிருந்தா துறையூர் நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார் அந்த மனுவில் சாலையில் உள்ள மேலும் ஒரு
புளியமரம் காய்ந்து இருப்பதால் அது எந்த நேரத்திலும் தங்கள் வீட்டின் மீது விழும் அபாயம் இருப்பதால் மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் .
ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் இதுவரை அவரது புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிருந்தா கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் வசித்து வரும் இளவரசி சித்ரா பிருந்தா ஆகியோர் 3 வீட்டிற்க்கு செல்லும் மின்சார கம்பி மீது ஏற்கனவே (நேற்று) புளியமரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு ஆறு வயதில் மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பதால் இரவில் மின்சாரம் இல்லாமல் இவர்கள் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.