தமிழ்நாட்டில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராக, நியமிக்கப்பட்டார். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு , உணவு பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றப்பட்டார். அவருக்கு பதில் அருணா புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 10 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.