Skip to content

சொகுசு வீடு வாங்கிய சமந்தா….. எவ்வளவு தெரியுமா?…

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் அவர் அடுத்து நடித்து வரும் ‘குஷி’ படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்.‌ விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

samantha

இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். ஆனால் விவாகரத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக வசித்த வீட்டை வாங்கி வசித்து வந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் நடிகை சமந்தா சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள பகுதியில் அடுக்குமாடியில் இந்த வீடு அமைந்துள்ளது. 14 வது மாடியில் இந்த வீடு 7944 சதுர அடியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட டூப்ளக்ஸ் வீடாகும். இந்த அடுக்குமாடி வீட்டை விலை சுமார் 7.8 கோடி என்று கூறப்படுகிறது.  இந்த வீட்டை தவிர வேறு சில இடங்களில் சமந்தாவிற்கு வீடு உள்ளது. சில சொகுசு கார்களை வைத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது சமந்தா சொத்து மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!