திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 47 வயதான அமுதா. இவர் திருச்சியில் உள்ள தனியார் உணவு விடுதியில் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு வீட்டிற்க்கு வருவது வழக்கம். இந்நிலையில் 25 ம் தேதி இரவு பணியை முடித்து விட்டிற்க்கு வந்த போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் பீரோவை திறந்து பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகார் பேரில் போலீசார் நகையை திருடிச் சென்ற நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை எதுமலை சாலை பிரிவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த 36 வயதான சுதாகர் எனவும் அமுதா வீட்டின் ஓட்டை பிரித்து நகையை திருடி சென்றதும் தெரியவந்தது. பின்னர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.