ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை(cisf) 56வது உதயதின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் முன்னிலையில், பாதுகாப்பு படை வீரர்களின் சாகசங்கள் நடந்தது. தீவிரவாதிகளை எப்படி மடக்குவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அவற்றை அமித்ஷா பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அமித்ஷா பேசினார். அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு தான் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வுகள் தமிழ், வங்காளம் , பஞ்சாபி ,உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது. மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்தும் கொடுக்கிறது.
ஒவ்வொரு மாநில மொழிக்கும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. தமிழுக்கும், அதன் பாராம்பரியத்துக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் தருகிறார். தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க ஒன்றிய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. 2047-க்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே பிரதமர் மோடியின் சபதம்
.