பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். திடீரென ஒரே சமயத்தில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் நடத்திய விசாரணையில் தங்கள் காலனி பகுதியில் சுமார் 350 வீடுகள்
உள்ளன . இதுவரை முறையான வீட்டு பட்டா வழங்கவில்லை என்று பலமுறை மனு அளித்தும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் உயர் நீதிமன்றம் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை என்று கூறினர். மேலும் இது தொடர்பாக மனு அளிக்க சென்றால் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறியும். தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.