Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலைநகர் என்டிஆர் ரெசிடென்சில் வசிப்பவர் 32 வயதான சபரிநாதன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்்எப் டயர் கம்பெனியில் மேற்பார்வையாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன் இவருடைய மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 17 ம் தேதி வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு சபரிநாதன் வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 30,000 பணம் திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து சபரிநாதன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!