திருச்சி, விமான நிலையம் காந்திநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் இருதயராஜ் .இவரது மகன் பெலிக்ஸ் கல்வின் ( 22). இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் . இவரது தாய் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டிலிருந்த லேப்டாப், ஹெட்செட், செல்போன், ரிஸ்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஏர்போர்ட் குலாப்பட்டி ரோடு சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வ பிரகாஷ் ( 20) என்ற வாலிபரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.