வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் 6 வாகனங்களில் சென்ற அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், இ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விசிக துணை பொதுச்சசெயலாளர் ஆதவ் அர்ஜூன் சொந்தமான சென்னை வீடு மற்றும் கோவை வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசுக்கு ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
