நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.