திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சுமி( 39) . இவரும் இவருடைய கணவரும் முசிறியில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு பணியை முடித்துவிட்டு வந்துள்ளனர். பின்னர் மாங்கரைப்போட்டை அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மூத்த மகன் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் கதவு உடைக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டு இருக்கின்றன என கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைந்து உடனே வேளாகநத்தம் வீட்டிற்கு சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 7 3/4 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . உடனே போலீஸ் நிலையம் வந்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….
- by Authour
