தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். திருநாவுக்கரசர் எம்.பி., ஐஜி கார்த்திகேயன் மற்றும் திமுகவினர் உள்பட ஏராளமானோர் வரவேற்றனர்.
முதல்வரின் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் செல்லும் வழியில் தஞ்சை மேரிஸ் கார்னரில் உள்ள முன்னாள் அமைச்சர் உபயதுல்லா இல்லம் சென்றார். கடந்தவாரம் காலமான அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உபயதுல்லா குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டிஆர் பாலு, பழனிமாணிக்கம் எம்.பி, பூண்டி கலைவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து தஞ்சை சர்க்கியூட் அவுஸ் சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு திருவாரூர் புறப்பட்டு செல்கிறார்.