Skip to content
Home » அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

  • by Senthil

இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா(ECI) பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 22ம் தேதி எஸ்றா  சற்குணம் காலமானார். அவரது உடலுக்கு கிறிஸ்தவ சமூக தலைவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு , சேகர் பாபு உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை பேராயர் எஸ்றா சற்குணம் உடல் நல்லடக்கம் கீழ்ப்பாக்கம்  காடா்ன் காலனியில் உள்ள  கல்லறை தோட்டத்தில் நடக்கிறது.  எஸ்றா சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்பதால் அவரது  உடல் அடக்கத்திற்கு போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனவே போலீஸ் குண்டுகள் முழங்க உடல் அடக்கம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!