ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட்டின் பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக் (59). இவரது கணவர் பிரையன் ராண்டால் (57). இவர் கடந்த 3 வருடங்களாக மூளை மற்றும் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ந்தேதி பிரையன் ராண்டால் காலமானார். சாண்ட்ரா புல்லக் மற்றும் பிரையனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இது குறித்து பிரையன் குடும்பத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த நோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எங்களுக்கு துணையாக நின்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மிகவும் நன்றி. பிரையன் காலமானதை ஏற்றுக்கொள்ள குடும்பத்திற்கு கொஞ்சம் காலம் தேவை. எனவே, குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என அதில் கூறி உள்ளனர்.
Tags:நடிகர் காலமானார்