லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே ஜப்ஃபா நகரில் சைனாகோகெஜ் ரயில் நிலையத்திற்குள் இரு பயங்கரவாதிகள் புகுந்தனர். மும்பை தாக்குதல் பாணியில் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர் 11 பேர் காயமடைந்தனர். இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கி்னறன. இதற்கிடையே இரு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ரயி்ல் நிலையத்திற்குள் புகுந்த காட்சிகள் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளன.