Skip to content

எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மூலம் எச்ஐவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற மாரத்தான் போட்டியை பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் சங்குப்பேட்டை வழியாக தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முடிவடைந்தது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000ம் ரொக்கத்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (11.09.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.
இந்தப் பரிசுத்தொகை ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, திருநங்கைகள் என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக போட்டியில் கலந்து கொண்டவர்களில் 7 நபர்களுக்கு தலா ரூபாய் 1,000 ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!