Skip to content

இந்தி திணிப்பு…. வட மாநிலத்தவர்கள் தாய்மொழி கற்பதையே கைவிட்டு விட்டனர்…. திருமா., பதிலடி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த வரும் மாவட்ட வளர்ச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல். திருமாவளவன், மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தொகுதி மறு சிறப்பு சீரமைப்பு மேற்கொண்டால், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு வரும் என்று தெரிய வருகிறது. 39 தொகுதி 31 தொகுதியாக குறைய வாய்ப்புள்ளது.
இதனை முன்கூட்டியே தடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளது

வரவேற்கத்தக்கது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக முதலமைச்சர் சீத்தராமையா இது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். தென் மாநில முதல்வர்கள் அனைவரும் இதை எதிர்க்க வேண்டிய தேவை எழந்துள்ளது. தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்வது ஆறுதல் அளிக்கிறது. இதனை நல்ல முறையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவார் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுதொகுதி மறு சீரமைப்பு நடைமுறைப்படுத்துவது இருந்தது வாஜ்பாய் காலத்தில் 25 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டு பின்னர் அது தற்போது வரை செயல்படுத்தவில்லை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு என்று திருமாவளவன் கூறினார். சீமான் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அவர் ஆஜராக மாட்டேன் என்று கூறியுள்ளது குறித்து கேட்ட பொழுது அது அவரது தனிப்பட்ட விவகாரம் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியது இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று கூறினார்.

தமிழக ஆளுநர் ரவி மூன்று மொழி கல்வி அவசியம் அதன் மூலம் தான் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளது குறித்து கருத்து கேட்டபோது, ஆளுநர் ரவி ஆர் எஸ் எஸ் அஜண்டாவை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வேலை திட்டம் என்று செயல்பட்டு வருகிறார் மூன்றாவது மொழி கற்றால் மட்டும் தான் இந்தி கற்றால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தமிழக மக்களை ஏமாற்று வேலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் ஹிந்தியை திணிக்க கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு என்று கூறினர் மேலும் வட மாநிலங்களில் ராஜஸ்தானி உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கும் பூர்வக்குடி மக்களின் தாய்மொழிகள் இந்தி திணிப்பால் சிதைந்து இந்தியை மட்டுமே பேசி தாய் மொழியை மறந்து விட்டனர் தாய்மொழியை கற்பதையும் கைவிட்டு விட்டனர் இந்த நிலை உருவாகி ஒரே நாடு ஒரே மொழி என்பது ஆபத்தானது பாஜக ஒரே மொழி என்ற பாசிச கொள்கை நிலைப்பாடு எடுத்துள்ளதற்கு ஹிந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு நிலையில் எடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம் என்று கூறினர்.
வட மாநிலங்களில் ஹிந்தியை மட்டும் கற்கின்றனர் ஹிந்தியை மட்டும் பேசுகின்றனர் ஆங்கிலத்தைக் கூட அவர்கள் கற்பதில்லை மூன்றாவது மொழியை அவர்கள் எப்போதுமே கற்பதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

error: Content is protected !!