இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் பேசினார். தற்போது தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோ படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்து
ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார். இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அவரது மனைவி உடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் ‘ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என மைக்கிலேயே கூறி இருக்கிறார். இருப்பினும் எனக்கு தமிழில் fluent ஆக பேச தெரியாது என கூறி ஆங்கிலத்திலேயே மனைவி பேசி இருக்கிறார்.