மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக இருந்த,பெரியார் விருதாளர், இந்தி எதிர்ப்பு போராளி மிசா பி. மதிவாணன் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ தலைமையில் தஞ்சை மண்டல தொழில்நுட்பப்பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று மதிவாணன் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மதிவாணன் நினைவாக செம்பை ஒன்றித்துக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் 10 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலா 5000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.