Skip to content

இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதி, திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சியில், மாவட்ட கழக இளைஞரணி சார்பில் “இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி” இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்

தலைமைக் கழக பேச்சாளர் மில்டன், கழக இளம் பேச்சாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் திருமானூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கென்னடி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!