இந்திய அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது. இதனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார். முந்தைய சீசன்களை போலவே 16-வது பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான்கானே தொகுத்து வழங்கினார். ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் ஒடிடி 2 பல சிறப்பு அம்சங்களுடன் இன்று தொடங்குகிறது.ஆனால் சல்மான் இந்தி பிக்பாஸின் ஒடிடி பதிப்பின் தொகுப்பாளராக இருப்பது இதுவே முதல் முறை.பிக்பாஸ் இந்தி ஒடிடி சீசன் 1, ஆகஸ்ட்-செப்டம்பர் 2021 ல் கரண் ஜோஹரால் தொகுத்து வழங்கப்பட்டது. சீசன் 142 நாட்களில் முடிந்தது.
மும்பை பிலிம் சிட்டியில் இந்தி பிக்பாஸ் ஒடிடி 2 நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.புதிய சீசனின் போட்டியாளர்கள் இன்று தொடக்க எபிசோடில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள், ஆனால் படக்குழு வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் ஊடகங்கள் கணித்துள்ளன. இவர்களில் அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக் நாஸ், ஜியா சங்கர், மனிஷா ராணி, பாலக் பர்ஸ்வானி போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது.
ஓடிடி படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், இந்தி வெப்சீரிஸ்கள் நிர்வாணமாகவே நடிகைகளை நடிக்க வைப்பது மட்டுமின்றி அதிகளவிலான ஆபாச வசனங்களை கொண்டுள்ளன. இப்போது ஒடிடியில் பிக்பாஸ் என்றால் கேட்கவா வேண்டும் எங்கே போக போகிறதோ பிக் பாஸ் சீசன்? ஜியோ சினிமா மூலம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இது ஜியோ சினிமா பயன்பாட்டில் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பத் தொடங்கும். இதை ஆன்லைனில் இலவசமாகப் பார்க்கலாம் மற்றும் 24X7 நேரலை ஸ்ட்ரீமிங்கைக் கொண்டிருக்கும். வைல்டு கார்டு என்ட்ரி ஆக வேண்டியவர்களில், முன்னாள் ஆபாச நடிகை மியா கலீபாஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.