நடிகை ரேகா, தனது 15-வது வயதில் இந்தியில் அஞ்சனா சபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். பாலிவிட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர்.
அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித் கான், அக்ஷய் குமார், சஞ்சய் தத் எனப் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் .ரேகா 1954ல் சென்னையில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் அவருக்கு பானுரேகா கணேசன் எனப் பெயர் வைத்தனர்.ரேகாவின் தாயார் தெலுங்கு நடிகை புஷ்பவல்லி.
இன்றும் பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. பாலிவுட்டில் ரேகாவுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் ரேகாவின் சுயசரிதை புத்தகத்தை யாசிர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் யாசிர் உஸ்மான் ரேகா தொடர்பான பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புத்தகத்தில், ரேகா தனது பெண் செயலாளரான பர்சானாவுடன் நேரடி உறவில் இருப்பதாகக் கூறி உள்ளார். ரேகாவின் படுக்கையறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் பர்சானா என்றும் அவர் கூறி உள்ளார்.
ரேகா பர்சானா இல்லாமல் ஒரு சிறிது நேரம் கூட இருக்க மாட்டார் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். புத்தகத்தில் ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்று யாசர் கூறி உள்ளார். பர்சானாவும் ரேகாவும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். பர்சானா ஆண்களின் உடையில் இருப்பார். பர்சானா எப்பொழுது பார்த்தாலும் பேன்ட் சர்ட் போன்ற உடைகளை மட்டுமே அணிந்திருப்பார். பர்சானாவின் தலைமுடியும் ஆண்கள் போல் வெட்டப்பட்டு இருக்கும்.
அதுபோல் ரேகா தான் நடித்த முதல் பாலிவுட் படமான அஞ்சனா சபர் திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அதில் விவரித்துள்ளார். அஞ்சனா சபர் படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேகா. அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 15 தான். அப்போது ரேகாவிடம் தெரிவிக்காமலே அப்படத்தின் இயக்குனர் ராஜா நவாதே ஒரு 5 நிமிட முத்தக் காட்சியை படமாக்கினாராம். இந்தக் கொடுமை குறித்து பேசியுள்ள ரேகா, இயக்குனர் ராஜா நவாதே ஆக்ஷன் சொன்னதும் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி சட்டென என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இயக்குனர் கட் செய்ய சொல்லாததால் 5 நிமிடங்கள் எனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். அதைக் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கேமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கை தட்டியும், விசில் அடித்தும் சிரித்தனர். இப்படி ஒரு காட்சி எடுக்கபோவதாக இயக்குனர் ரேகாவிடம் சொல்லவே இல்லையாம். இத்தனை ஆண்டுகளாக இதனை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த ரேகா தற்போது தனது சுயசரிதை மூலம் அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.