இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பின்னர் இழுபறி நிலை நீடித்தது. 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 38 இடங்களில் முன்னணியில் இருந்தது.
பா.ஜ. 27 இடங்களில் முன்னணியில் இருந்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்தனர். எனவே இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது. பா.ஜ.விடம் இருந்த இமாச்சல் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதனால் இமாச்சலில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அதே நேரத்தில் குஜராத்தில் பாஜ. அபார வெற்றி பெற்றுள்ளது. 7வது முறையாக அங்கு பா.ஜ. ஆட்சி அமைக்கிறது.
அதே நேரத்தில் 5 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் 6 தொகுதிகளில் பா.ஜ. பின்னடைவை சந்தித்து உள்ளது.
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கட்சியின் மூர்த்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.