Skip to content
Home » மலை பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

மலை பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று   துறையூர் அடுத்த பச்சமலை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து   மலையில் உள்ள  தெனபரநாடு கிராமம் புத்தூர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மலை வழித்தட புற நகர பேருந்துகளில் மலைப்பகுதியில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தும் வகையில் மலை  வழித்தட புறநகர பேருந்துகளை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்   இன்று  துவக்கி வைத்தார். மலையில் இயக்ககூடிய புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதியை இன்று முதன் முதலாக அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் பச்சைமலையில் உள்ள 5383 பெண்கள் பயனடைவார்கள்.  பச்சைமலையில் 6 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் கே.என்.நேரு , சா.சி.சிவசங்கர் ,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், சிறப்பு திட்ட செயலாக்க அரசு முதன்மை செயலாளர் தரேஸ் அகமது, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,  திருச்சி மேயர் மு.அன்பழகன் ,  பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு,  மற்றும் எம்.எல்.ஏக்கள் சவுந்திரபாண்டியன்,  ஸ்டாலின் குமார் , தியாகராஜன்,  கதிரவன்,  அப்துல் சமது, போக்குவரத்து துறை பொது மேலாளர் (திருச்சி மண்டலம்).ஆ.முத்துகிருஷ்ணன், பொது மேலாளர்முகம்மது நாசர்(கூட்டாண்மை ,ரெங்கராஜன் (கூட்டாண்மைமனித வள மேம்பாடு) மற்றும் பலர்  விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!