Skip to content

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகளுக்கான கலைவிழாவாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காலை முதலே , , தனிநபர் மற்றும் குழு நடனம், பாட்டு, வினாடி வினா,பேஷன் ஷோ முக அலங்காரம், கோலம், புகைப்படப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன..

இதில், கோவை,திருப்பூர், , ஈரோடு,, மதுரை, திருச்சி,கரூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளின் இடையே நடிகை அண்மையில் அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படத்தில் வில்லியாக கலக்கிய ரெஜினா

கெசன்ட்ரா, நடிகர் ஆரவ் மேடையில் தோன்றி பேசினார். இதே போல லப்பர் பந்து புகழ் சஞ்சனாவும் மேடையில் தோன்றி மாணவிகளிடையே பேசினார். மேலும் மடோனா செபாஸ்டின்,மீனாட்சி சவுத்ரி,உள்ளிட்டோர் மேடையில் தோன்றி நடனமாடினர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மலையாள பட உலகின் முன்னனி நடிகரான மோகன்லால் மேடையில் தோன்றி ஆச்சரியம் அளித்தார். அவருடன் வந்த நடிகர் பிரிதிவிராஜ் தாம் இயக்கி மோகன்லால் நடித்து வெளி வர உள்ள எம்புரான் படம் குறித்து பேசினர்.

error: Content is protected !!