Skip to content

தஞ்சை அருகே அதிதிறன் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பஞ்சநதிக் கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் 141 இலட்சம் மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள்,  தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா   ஆகியோர் இன்று (29.03.2025) திறந்து வைத்தார்கள்.

தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் அதிதிறன் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும், விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளையும், பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கொடுக்கும் மற்றும் எந்தவித சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில் தொழில்களைப் பார்த்துக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் தொழில்களையும் கொண்டு வர முடியாத அளவுக்கு வலுவான நெறிமுறைகளை உருவாக்கி வருகின்றனர்.  டெல்டா பகுதியில் இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்தி உணவு தொழிற்சாலைகளையும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  , தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி.  சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு) டி.கே.ஜி. நீலமேகம்  (தஞ்சாவூர்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன் , கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி அவர்கள், மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நெ.செல்வம் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

error: Content is protected !!