Skip to content
Home » சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, தனது 4 வயது பேத்தியுடன் 14.12.2017 அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மொபட்டில் வந்த 16 வயது சிறுவன், மூதாட்டியையும் சிறுமியையும் தனது வண்டியில் ஏற்றிச்சென்றார். மூதாட்டியை அவரின் வீட்டிலேயே விட்டுவிட்டார். பின்னர் சிறுமியை அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுகிறேன் என அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கன்வாடிக்கு செல்லாமல், மலை அடிவாரத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தாக்கியதில் இறந்துவிட்டாள். சிறுமியை தேடியபோது, மலை அடிவாரத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டாள். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுவனை கைது செய்து சேலத்தில் உள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டு, அந்த சிறுவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து 2019-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு…  மைனர் குழந்தையை மனுதாரர் அழைத்து சென்றதை பலரும் பார்த்துள்ளனர். பின்னர் மைனர் குழந்தை பாறைகளுக்கு இடையே பிணமாக கிடந்தது உறுதியாகியுள்ளது. மனுதாரர் மீதான கடத்தல், கொலை, சாட்சிகளை அழித்தல், குழந்தைக்கு எதிரான பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர் தற்போது தான் 23 வயதை அடைந்துள்ளார். ஆயுள் தண்டனை அவர் கைதான உடன் சேலம் சிறார் காப்பகத்திலும், அதன்பின் மேலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் தங்கவைக்கப்பட்டார். பின்னர் 22.8.2019 அன்று முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் இருந்து அவரை முற்றிலும் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை. அவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பை மாற்றியமைத்து, மனுதாரருக்கு கொலை குற்றப்பிரிவின்கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அவர் அனுபவித்த தண்டனையை கழித்து மீதமுள்ள காலம் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!