கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் சேலம் ஆது்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ். இவர் ஒரு கார் விபத்தில் பலியானார். இவர் மரணம் விபத்து அல்ல, கொலை என்றும், கொடநாடு கொலை கொள்ளையில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக கனகராஜின் சகோதரர் தனபால் கருத்து தெரிவித்து இருந்தார்.
தனபால் தன்னைப்பற்றி பேச தடை விதிக்க வேண்டும். அத்துடன் கொடிட நாடு வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் , தனபால் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டது.