பிரபல பாடகி மற்றும் நடிகை சுசித்ரா. இவரது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்குமார். இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் சுசித்ரா தனது கணவர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி தனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 10 தினங்களாக சமூகவலைத்தளம் முற்றுமாக சுசித்ரா ஆக்கிரமிப்பில் தான் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக்குமார், சுசித்ரா தன்னைப்பற்றி பேச தடை விதிக்க வேண்டும். அத்துடன் அவர் இதுவரை தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே ஆயிரம் ரூபாய் தர உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.