டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி கோர்ட் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் வரை கெஜ்ரிவால் வெளியே வர இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
