Skip to content

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,  அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக  தேர்தல் ஆணையம் எந்த  விசாரணையும் நடத்தக்கூடாது என  உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி குறித்து  விசாரணை நடத்த  தேர்தல் ஆணையத்துக்கு  தடை விதித்து  இன்று உத்தரவிட்டது.   இதற்கு வரும்  27ம் தேதிக்குள்  பதிலளிக்கும்படியும்   தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை  வரும் 27ம் தேதிக்கு  ஒத்திவைத்தது.

 

 

error: Content is protected !!