கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம் குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது. இந்த வழக்கில், முதல்வர் ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் கல்ராயன் மலைக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். துறை அமைச்சரையும் அழைத்து சென்று ஆய்வு செய்ய வேண்டும். சாலை வசதி, ரேஷன் வசதி அங்கு செய்ய வேண்டும்.நாங்கள் சென்று பார்வையிட்டால் எடுக்கப்படும் நடவடிக்கையை விட முதல்வர் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் நடவடிக்கை நன்றாக இருக்கும் என ஐகோர்ட் கருத்து கூறியது.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு திட்டம் குறித்து அரசு அறிக்கை தயாரித்து உள்ளது. அதை நாளை மறுநாள் தாக்கல் செய்கிறோம் என்றார். எனவே இந்த வழக்கை நாளை மறுதினத்துக்கு ஐகோர்ட் தள்ளிவைத்து உத்தரவிட்டது.