உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் காணொலி காட்சி என இரண்டு முறையிலும் கலப்பு விசாரணை நடைபெறும். இந்த வசதியை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும்வழக்காடிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
