அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கம் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது இருக்கிறதா, காலாவதியாகிவிட்டதா என அதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.