Skip to content
Home » செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் ‘செவ்வாய்கிழமை’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. தனது ‘ஆர்எக்ஸ் 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இந்தப் படத்தில் அஜய் பூபதி இணைந்துள்ளார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.  இந்த படத்தில் நடிக்கும் பாயல் ராஜ்புத் கதாபாத்திரத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் பாயல் மேலாடையின்றி கவர்ச்சிகரமாக தோற்றம் அளிக்கிறார்.அவரது இடது கை ஆட்காட்டி விரல் மீது ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போன்று வெளியாகி உள்ளது.

சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் அஜய் பூபதி. ‘முத்ரா மீடியா ஒர்க்ஸ்’ மற்றும் ‘ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.  “‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களின் கிராமத்தை மையமாக கொண்டுள்ள ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம். நம் மண்ணின் பாரம்பரிய தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கதைக்கு முக்கியமான கதாபாத்திரமாக உள்ளது” என இயக்குநர் அஜய் பூபதி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *