Skip to content
Home » நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதி…

நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், சுனைனா. ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’, ‘வன்மம்’, ‘தெறி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள சுனைனா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனைனா பகிர்ந்துள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுவது போன்ற போட்டோ தான் அதற்கு காரணம். தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுனைனா உடல்நலம் தேறி மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *