Skip to content
Home » திருமண ஆசை இல்லை…நடிகை ஆண்ட்ரியா..

திருமண ஆசை இல்லை…நடிகை ஆண்ட்ரியா..

தமிழில் முன்னணி பாடகியாக இருப்பவர் ஆண்ட்ரியா. தனது இனிமையான குரலால் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பன்முக திறமைக்கொண்ட இவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.  ஏற்கனவே மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு உடற்பயிற்சி தொடர்பான  ஆலோசனைகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.  இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது வரை எனக்கு திருமண ஆசை இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், திருமணம் செய்யாமலும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *