முன்னணி தெலுங்கு ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஒருவனை சுட்டி காட்டியதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்து விட்டார் எனவும் கண்ணீர் மல்க விசித்ரா பிக் பாஸ் இல்லத்தில் பேசியுள்ளார்.
இது குறித்து விசித்ரா பேசுகையில், ‘அந்த தெலுங்கு படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் மலம்புழாவில் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்குவந்த ஹீரோ ‘இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?’ எனக் கேட்டுவிட்டு இரவில் தன்னுடைய ரூமுக்கு வா என சொல்லிவிட்டு போய்விட்டார். நான் அதிர்ச்சி ஆகி விட்டேன். என் பெயரைக் கூட அவர் கேட்கவில்லை.
இதையடுத்து, ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஒரு கலவர காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஆக்ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறாக தொட்டதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுத்தனர். அப்போது மீண்டும் அதேபோல தடவினார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்தபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.
பின்னர் போலீஸிடம் சென்றேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு அளிக்காததால் தான் நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தேன். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீள முடியாததால் தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை. ’இப்படியான மரியாதை தரும் இடத்தில்தான் நீ வேலை பார்க்கிறாயா?’ என்று அந்த ஓட்டல் மேனேஜர் என்னைக் கேட்டார். பின்னாளில் அவர்தான் என்னைத் திருமணம் செய்து கொண்டு எனக்கு மரியாதையான வாழ்க்கையைக் கொடுத்தார் என்றும் கண்ணீர் மல்க கூறினார் விசித்ரா.