Skip to content
Home » வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

வௌ்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விசால்- அமீர்கான்…. படகு மூலம் மீட்பு… பாராட்டு..

  • by Authour

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால்,‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகராக உள்ள இவரின் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து எஃப் ஐ ஆர் படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது.... அவதிப்படுவதாக பதிவு...

Image

இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்ததால், காரப்பாக்கம் உள்ள தனது வீட்டை வெள்ளநீர் சூழந்ததாக பதிவிட்டுள்ளார். மின்சாரம், சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுவதாக உதவி கோரி அவர் டிவிட்டரில் போட்டோக்களுடன் பதிவிட்டார். இதனை தொடர்ந்து  நடிகர் விஷ்ணு விசாலை உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்புக்குழுவினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.  மீட்புக்குழு  நடிகர் விஷ்ணு விசால் பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணியாற்றுகிறது. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார். மேலும் காரப்பாக்கத்தில் உள்ள அமீர்கானையும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மீட்புக்குழுவுடன் நடிகர் விஷ்ணு விசாலும்-அமீர்கானும் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *