Skip to content
Home » அப்பா வேற….நான் வேற…. அதிரடி காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா…

அப்பா வேற….நான் வேற…. அதிரடி காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா…

  • by Senthil

விஜய்சேதுபதி மகன் சூர்யா இதற்கு முன்பு விஜய்சேதுபதியுடன் படங்களில் நடித்துள்ளார். ஆனால், கதாநாயகனாக அனல் அரசு இயக்கத்தில் ‘ஃபீனிக்ஸ்-வீழான்’ என்ற ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் அறிமுகமாகிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் சூர்யா.

சூர்யா, அனல் அரசு

”அப்பாவோட படப்பிடிப்பில் அவருக்கு சாப்பாடு கொடுக்கப் போனேன். அப்போதுதான் மாஸ்டரைப் பார்த்தேன். எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு நல்லப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அந்த சமயத்தில்தான் அனல் மாஸ்டர் என்னைப் பார்த்து அவருக்கான கதையில் என்னைத் தேர்ந்தெடுத்தார். அப்பாவுக்கும் கதை பிடித்திருந்தது” என்றார்.

சூர்யா
சூர்யா

மேலும், “அப்பா வேற, நான் வேற. அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போக பார்த்துக் கொள்ளலாம். அப்பா மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளதால் இங்கு கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!