நடிகர் வடிவேலு நீண்ட இடைவௌிக்கு பிறகு ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் நடித்திருந்தார். மக்கள்-குழந்தைகள், குடும்பம் குடும்பமாக பார்த்து மகிழ்ந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலு தனியார் டிவி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது… திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் தவறாக பேசுகிறார்கள். தவறாக பேசப்படும் விமர்சனங்களை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு திரைபடத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கிறார்கள். திரைப்பட விமர்சனம் திறந்தவௌி கழிப்பிடம் போல் மாறிவிட்டது. தவறான விமர்சனத்தால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மீதும் தவறான விமர்சனம் தான். ஆனால் மக்கள் குடும்பம் குடும்பமாக பார்த்து மகிழ்ந்தார்கள். தவறான விமர்சனம் படத்தில் பணியாற்றிய
தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் பறிபோகும். தவறான விமர்சனம். யார் தட்டிகேட்பது என்றே தெரியவில்லை. திட்டி பேசுவது தான் அவர்களுக்கு பொழப்பு என்றாகி விட்டது. மனைவி தடுத்தாலும் திட்டி பேசுவதை நிறுத்த மாட்டார்கள். அசிங்கம் அசிங்கமாக பேசுகிறார்கள் தாங்க முடியல. அவதார் 2 படத்தை நல்லா இல்லை என்று விமர்சிக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோபைடனை கூட திட்டுவார்கள். ரஷ்ய அதிபர் புதினையும் விட்டு வைக்க மாட்டார்கள். 2023 அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.