சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ல் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதியப்பட்டது. சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகே திரையுலகமே மாஃபியா கும்பல் குறித்த தகவல்கள் வௌிவந்தது. இந்நிலையில் சுஷாந்தின் உடலில் தாக்குதல் நடத்தியதற்கான காயங்கள் இருந்ததாக மும்பையை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சுஷாந்தின் கழுத்தில் இருந்த காயங்கள் கொலை போல இருந்ததாக ஊழியர் ரூப் குமார் ஷா தகவல் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ எடுக்கவில்லை. போட்டோ மட்டுமே எடுத்ததாகவும் குற்றசாட்டு விடுத்துள்ளார்.
