Skip to content
Home » நடிகர் சத்தியராஜ் சகோதரியின் பங்களாவில் குடிநீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி…

நடிகர் சத்தியராஜ் சகோதரியின் பங்களாவில் குடிநீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை கோவனூர் செல்லும் வழியில் நடிகர் சத்யராஜின் சகோதரியின் பண்ணை வீடு உள்ளது அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டியானை நீர் அருந்தும் பொழுது உள்ளே விழுந்து இறந்து கிடந்தது நேற்று மாலை 4 மணி அளவில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை காவலர்கள் அந்த பகுதியை சோதனை செய்த பொழுது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும் குட்டி யானையின் உடைய உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன மருத்துவர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வனத்துறை காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் இதில் இரண்டு ஜேசிபி

இயந்திரங்கள் கொண்டு தொட்டியை உடைத்து குட்டி யானையை வலையின் மூலம் மேலே எடுக்கப்பட்டது இதைத் தொடர்ந்து குட்டியானையை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் உடறாய்வு கூறு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகள் விவசாய நிலங்களுக்குள் வந்து உணவு மற்றும் நீரை தேடி அலைகின்றன. பல்வேறு சமயங்களில் வனத்துறை அதிகாரிகள் யானைகளை திரும்பவும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதால் தற்போதைய சம்பவம் போல் ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் 14 யானைகள் மின்வெளியினாலும் பல்வேறு காரணங்களினாலும் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு தமிழக அரசும் வனத்துறை அதிகாரிகளும் வன விலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *