குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழ்த் திரையில் வில்லனாக வலம் வந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். இவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் மகன் ஒருவர் ஆட்டிசம் குறைபாட்டோடு பிறந்தார். அவருக்கு இப்போது 23 வயதாகிறது.
இதன் பிறகு பிருத்விராஜ்க்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடுக ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து தனித்து வாழ்ந்து வந்த 57 வயதாகும் பப்லு சில மாதங்களுக்கு முன்பு 25 வயதாகும் ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேட்டி கொடுத்தனர்.
தனது மகன் வயதில் இருக்கும் பெண்ணுடன் பப்லுவுக்குத் திருமணமா என பல விமர்சனங்கள் வந்தாலும் அதை தாங்கள் பொருட்படுத்தவில்லை எனவும் இந்த ஜோடி கூறியது.
பப்லுவை விட ஷீத்தல் 30 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஷீத்தல் பப்லுவை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜோடியாக இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருக்கின்றனர்.
‘பிரிந்துவிட்டீர்களா’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட்டில் கேட்டிருக்கும் கேள்வியையும் ஷீத்தல் லைக் செய்திருக்கிறார். அதனால் அவர்கள் பிரிந்தது உறுதியாகியுள்ளது என நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர். மேலும், தனது பிறந்த நாளையும் ஷீத்தல் இல்லாமல் பப்லு தனியாகக் கொண்டாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.